மாற்றுத்திறனாளி உறுப்பினர் நியமனம் உள்ளாட்சிகளில் விண்ணப்பிக்க அழைப்பு
மாமல்லபுரம்,:செங்கல்பட்டு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களில், மாற்றுத்திறனாளி உறுப்பினரை நியமிக்க, விண்ணப்பம் வரவேற்பதாக, உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.தமிழக நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி மன்றங்களில், தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவி வகிக்கின்றனர்.தற்போது மன்ற நியமன உறுப்பினராக, மாற்றுத்திறனாளியை நியமிக்க, தமிழக அரசு முடிவெடுத்து விதிமுறைகள் வகுத்து அறிவித்துள்ளது.அதன்படி, மாநகராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி மன்றங்களில் உறுப்பினர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்.விரும்புவோர், https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்ற உறுப்பினர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.inஆகிய இணையதள முகவரியில் வரும் 17ம் தேதி வரை, விண்ணப்ப படிவம் பதிவிறக்க அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வசிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், நிறைவுசெய்த படிவங்களை அவரவர் பகுதி ஆணையரிடமும், பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், அவரவர் பகுதி செயல் அலுவலரிடமும், வரும் 17ம் தேதிக்குள், நேரில் அல்லது தபால் வாயிலாக அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.