உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நாட்டுப்புற கலை பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

நாட்டுப்புற கலை பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு:மாமல்லபுரம், அரசு கட்டட கலை மற்றும் சிற்பக் கலை கல்லுாரியில், ஓராண்டு நாட்டுப்புற கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மாமல்லபுரம், அரசினர் கட்டட கலை மற்றும் சிற்பக் கலை கல்லுாரியில், பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையம் உள்ளது.இங்கு, நடப்பு கல்வியாண்டில் தப்பாட்டம், நாடகம், சிலம்பாட்டம் ஆகிய மூன்று நாட்டுப்புற கலைகளில், ஓராண்டு பகுதி நேர பயிற்சி அளிக்கப்பட உள்ளது.வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சியின் நிறைவில், தமிழக அரசின் கவின் பல்கலையால், சான்றிதழ் வழங்கப்படும்.இதில், 17 வயது நிறைவடைந்த, நாட்டுப்புற கலைகளில் விருப்பம் உள்ள அனைவரும் சேர்ந்து பயிற்சி பெறலாம். ஆண்டு கட்டணமாக, 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.ஆர்வமுள்ளவர்கள், மாமல்லபுரம் அரசினர் கட்டட கலை மற்றும் சிற்பக் கலை கல்லுாரியில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.பயிற்சி குறித்த கூடுதல் விபரங்களுக்கு, 044 - 27442261 அல்லது 73586 28242 ஆகிய எண்களில் அழைக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி