மாமல்லபுரம் அருகில் சாலையில் கார் தீக்கிரை
மாமல்லபுரம்:மாமல்லபுரத்திலிருந்து, திருக்கழுக்குன்றம் நோக்கி, நேற்று பிற்பகல் டாடா இன்டிகா கார் ஒன்று சென்றது.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார், 48, என்பவர், காரை ஓட்டிச் சென்றார். காரில், வேறு பயணியர் இல்லை. குச்சிக்காடு பகுதியில், 2:00 மணியளவில் கடந்த போது, 'ஏசி' சாதனத்தில் இருந்து புகை வந்துள்ளது.இதைப் பார்த்த ஓட்டுனர், உடனே காரை நிறுத்தி வெளியேறினார். அப்போது, கார் தீப்பற்றி எரிந்து நாசமானது.இதுகுறித்த தகவலின்படி வந்த மாமல்லபுரம் தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். இதுகுறித்து, புகார் எதுவும் தரப்படவில்லை என, மாமல்லபுரம் போலீசார் தெரிவித்தனர்.