உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேராசிரியர் வீட்டை இடித்து தரைமட்டம் ம.தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு

பேராசிரியர் வீட்டை இடித்து தரைமட்டம் ம.தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு

கிளாம்பாக்கம்,:கிளாம்பாக்கம் அருகே, தனிநபர் வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிய ம.தி.மு.க., மாவட்ட செயலர் உட்பட நால்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.கிளாம்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி பிரதான சாலையை சேர்ந்தவர் ரமேஷ், 43: தனியார் கல்லுாரி பேராசிரியரான இவர், கடந்த 2011ல், காரணை புதுச்சேரியில், நாசர், விஜயன் ஆகியோரிடமிருந்து 6 சென்ட் நிலத்தை வாங்கி, அதில் வீடு கட்டி, மின் இணைப்பு பெற்று, ஐந்து ஆண்டுகள் வசித்து வந்தார்.அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, மனைவியுடன் சென்னையில் வாடகை வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.கடந்த ஆண்டு ரமேஷ் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் ரவி என்ற எம்.ஜிஆர்., என்பவர், அந்த நிலம் தனக்குரியது எனக் கூற, இருதரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த 10ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட ம.தி.மு.க., செயலர் ராஜேந்திரன் தலைமையில், ரவி அவரது மகன் அருண், உறவினர் ராஜேந்திரன் ஆகியோர், ரமேஷ் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணை மிரட்டி, வீட்டை காலி செய்ய வைத்துள்ளனர்.தொடர்ந்து ஜே.சி.பி., இயந்திரம் வைத்து, ரமேஷின் வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், முதல்வரின் தனிப்பிரிவிற்கும் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் தனிப்பிரிவிலிருந்து கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து ம.தி.மு.க., மாவட்ட செயலர் ராஜேந்திரன், ரவி, அருண், ராஜேந்திரன் ஆகியோர் மீது போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி