உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.1.66 கோடியில் வளர்ச்சி பணி செங்கல்பட்டு நகராட்சி ஒப்புதல்

ரூ.1.66 கோடியில் வளர்ச்சி பணி செங்கல்பட்டு நகராட்சி ஒப்புதல்

செங்கல்பட்டு, ; செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 33 வார்டுகள் உள்ளன.இப்பகுதிகளில், குடிநீர் பணி, சிறுபாலம், மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.அதையடுத்து, 1வது வார்டு, காஞ்சிபுரம் சாலை பகுதியில், புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க, 4.௫௦ லட்சம் ரூபாய்; 11, 26, 31வது வார்டுகளில், மழைநீர் கால்வாய் துார்வாரி சுத்தம் செய்ய, 5 லட்சம் ரூபாய்; 14வது வார்டில், ஆழ்துளை கிணறு அமைக்க 3.௩௦ லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல், 17வது வார்டில், பெரியமணியக்கார தெருவில், நகராட்சி பொது கிணற்றில் இரும்பு வேலி அமைக்க, ௧ லட்சம் ரூபாய்; 26வது வார்டில், சுந்தர விநாயகர் கோவில் தெருவில், மழைநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் கட்ட 9.௬௦ லட்சம் ரூபாய், பிள்ளையார் கோவில் தெருவில், சிறுபாலம் அமைக்க, ௨ லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாசித் தெருவில் பைப் லைன் அமைக்க, 11 லட்சம் ரூபாய், சிறுபாலம் கட்ட 10 லட்சம் ரூபாய்; 10வது வார்டில், விடுபட்ட தெருக்களுக்கு கான்கிரீட் சாலை அமைக்க, 2 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது.மதுரை வீரன் கோவில் தெரு, ஜி.எஸ்.டி., சாலை, மலை ரோடு வீரப்பத்திரர் தெரு, கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட, நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.இப்பணிகளை, குடிநீர் நிதியான ௧.௬௬ கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, டெண்டர் விடப்பட்டது. இப்பணிகள் அனைத்தையும் செயல்பாட்டிற்கு கொண்டுவர, நேற்று நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை