செங்கையில் முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க அழைப்பு
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட் டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க, விருப்பமுள்ள தொழில் முனைவோர் விண்ணப் பிக்கலாம்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில், 'ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும்' என அறிவித்தார்.அதன்படி முதல்வர் மருந்தகம் அமைக்க, பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், தமிழ்நாடு முழுதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு, அரசு மானியம் 3 லட்சம் ரூபாய், இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.விருப்பம் உள்ள தொழில்முனைவோர், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.