உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  விளையாட்டு மையத்தில் ஜல்லிக்கல் குத்தி சிறுவர்கள் அவதி

 விளையாட்டு மையத்தில் ஜல்லிக்கல் குத்தி சிறுவர்கள் அவதி

திருப்போரூர் பேரூராட்சி கிரிவல சாலை, வனத்துறை அலுவலகம் அருகே, சிறுவர் விளையாட்டு மையம் உள்ளது. இந்த விளையாட்டு மையத்தில் உள்ள பல்வேறு விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் விளையாடி வருகின்றனர். இதன் தரைப்பகுதியில் ஜல்லிக்கற்கள் பரவி இருப்பதால், சிறுவர்கள் காலில் குத்தி அவதிப்படுகின்றனர். குழந்தைகள் விளையாட்டு பகுதியாக இருப்பதால், பாதுகாப்பு கருதி மண் கொட்டி சீரமைக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறியதால், சிறுவர்கள் விளையாட முடியாமலும், அடிபட்டும் சிரமப்படுகின்றனர். எனவே, மேற்கண்ட விளையாட்டு மையத்தின் தரைப்பகுதியை சரி செய்ய, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - என்.ரவிக்குமார்: திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்