உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முதல்வர் மருந்தகத்தில் செங்கை கலெக்டர்

முதல்வர் மருந்தகத்தில் செங்கை கலெக்டர்

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி 10வது வார்டு களிவந்தபட்டு கிராமத்தில், தென்மேல்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது.இந்த மருந்தகத்தை, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.மருந்தகத்தில் விற்பனை, மருந்துகள் இருப்பு மற்றும் இந்த பகுதியில் முதல்வர் மருந்தகம் இருப்பது மக்களுக்கு தெரியும் வகையில் செய்யப்பட்ட விளம்பரம் உள்ளிட்டவை குறித்து, கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகோபால் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி