கருக்கலைப்புக்கு சேர்க்கப்பட்ட கல்லுாரி மாணவி உயிரிழப்பு
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், ராஜேஷ்குமார், 45, என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர் அதே கல்லுாரியில் பயிலும் 23 வயது மாணவியுடன் பழகி, கர்ப்பமாக்கி, கடந்த 19ம் தேதி கருக்கலைப்பு செய்ய, கேளம்பாக்கம் அருகே படூர் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.அங்கு பரிசோதனை செய்த போது மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின், தாழம்பூர் போலீசார் சென்று மாணவியை மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுதொடர்பாக, உதவி பேராசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிடையில், சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதையடுத்து, போலீசார் கொலை வழக்காக மாற்றி, உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.மேலும், ராஜேஷ்குமார் பல மாணவியர், சில பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் விசாரணையில் தெரியவரலாம் என, போலீசார் கருதுகின்றனர்.