உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சமுதாய கூடம் கட்டும் பணி துவக்கம்

சமுதாய கூடம் கட்டும் பணி துவக்கம்

செங்கல்பட்டு,மேலமையூர் ஊராட்சியில், சமுதாய கூடம் கட்டும் பணி துவங்கியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த, மேலமையூர் ஊராட்சியில், சமுதாய கூடம் இல்லாததால், ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கலெக்டர் மற்றும் எம்.ஏல்.ஏ., ஆகியோரிடம், கோரிக்கை வைத்தனர். அதன்பின், சமுதாய கூடம் கட்ட, 2024-25 ம் ஆண்டில், தொகுதி மேம்பாட்டு நிதியில், 96 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, செங்கல்பட்டு தி.மு.க., எம்.எல்.ஏ., வரலட்சுமி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்நிதியில், சமுதாய கூடம் கட்ட, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் சில தினங்களுக்கு முன் துவங்கி, நடைபெற்று வருகிறது. இப்பணியை, ஆறு மாதங்களில் முடித்துதர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ