புகார் பெட்டி :சாலையோரம் முட்புதர்கள் காவனுாரில் விபத்து அபாயம்
சித்தாமூர் அடுத்த காவனுார் கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.சாலை ஓரத்தில் முட்புதர்கள் வளர்ந்துள்ளதால், கனரக வாகனங்கள் வரும்போது, இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலையோரம் ஒதுங்க முடியாமல், பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.அதனால், இப்பகுதியில் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சாலையோரம் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பா.ராமசாமி, சித்தாமூர்.நயினார்குப்பம் பள்ளி வளாகம்செடிகள் மண்டி சீரழிவுசெய்யூர் அடுத்த நயினார்குப்பம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 60க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளி வளாகத்தில், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளதால், விஷ பூச்சிகளின் வாழ்விடமாக மாறி, பள்ளி மாணவ- - மாணவியருக்கு பாதிப்புஏற்படும் நிலை உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளிவளாகத்தில் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- க.வடிவேல் நடராஜன், ஓதியூர்.பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில்தேங்கும் கழிவுநீரால் அவஸ்தைதிருப்போரூரில் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், மகளிர் திட்ட அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், சிமென்ட் கிடங்கு, சத்துணவு முட்டை கிடங்கு ஆகியவை அமைந்துள்ளன.வளாகம் முழுதும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலக வளாகத்தை ஒட்டி, தனியார் உணவகம் உள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், பி.டி.ஓ., அலுவலக வளாகத்திற்குள் பாய்ந்து, ஆலமரத்தடியில் தேங்குகிறது.பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வரும் பயனாளிகள், அந்த ஆலமரத்தடியில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கின்றனர். அப்போது, அங்கு தேங்கிய கழிவு நீரால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தேங்கியுள்ளகழிவுநீரை அகற்றி, கழிவுநீர் விடுவதை தடுக்கவேண்டும்.- என்.கண்ணன், திருப்போரூர்.குண்டும், குழியுமானகலிவந்தப்பட்டு சாலைமறைமலை நகர் - கலிவந்தப்பட்டு இடையிலான சாலை, 4 கி.மீ., நீளமுடையது. இந்த சாலையின் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, இந்த சாலையை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ப.சீனிவாசன், மறைமலை நகர்.