உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களால் மதுராந்தகத்தில் போக்குவரத்து நெரிசல்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களால் மதுராந்தகத்தில் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம், மதுராந்தகத்தில், விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அவற்றை அகற்ற வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.மதுராந்தகம் ஜி.எஸ்.டி., சாலையில், காவல் நிலையத்திற்கும், நீர் பாசன துறை அலுவலகத்திற்கு இடையே சாலையை ஆக்கிரமித்து, விபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்களால், இருசக்கர வாகனத்தில் செல்வோர், நடைபாதையில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.காவல் நிலையம் மற்றும் நீர் பாசன துறை அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதியின்றி தவிக்கின்றனர்.எனவே, விபத்து மற்றும் குற்ற செயல்களில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்களை, போலீசார் விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை