உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் 4,000 தொகுப்பு வீடுகள் கட்டும் பணி... துவக்கம் : 3 மாதங்களில் பயனாளிகளிடம் ஒப்படைக்க உத்தரவு

செங்கையில் 4,000 தொகுப்பு வீடுகள் கட்டும் பணி... துவக்கம் : 3 மாதங்களில் பயனாளிகளிடம் ஒப்படைக்க உத்தரவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மாநில அரசின் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தில், 4,000 வீடுகள் கட்ட 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடு கட்டும் பணியை துவக்கி வைத்த கலெக்டர் அருண்ராஜ், ''மூன்று மாதங்களில் வீடுகள் கட்டி பயனாளிடம் ஒப்படைக்க வேண்டும் என,'' வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. கிராமங்களில், குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் கணக்கெடுக்கும் பணியில், ஊராட்சி செயலர், சுகாதார ஊக்குனர் ஆகியோர் ஈடுபட்டனர். அவர்கள், கணக்கெடுப்பு செய்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அறிக்கை சமர்பித்தனர்.அதன் பின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகள் கணக்கெடுப்பை சரிபார்த்து, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரிடம், அறிக்கை சமர்பித்தனர். கணக்கெடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 57, 498 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 47,245 பயனாளிகள் வீட்டுமனை பட்டா வைத்துள்ளனர். இவர்களுக்கு, அனைவருக்கும் வீடுகள் வழங்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்தது.இத்திட்டத்தில், ஒரு வீடு கட்ட அரசு 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்கள் 100 நாள் வேலை செய்ய 28 ஆயிரம் ரூபாய், துாய்மை பாரத இயக்க திட்டத்தில், கழிப்பறை கட்ட 12 ஆயிரம் ரூபாய் என, 3.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கிறது. நடப்பு 2025 -26 ம் ஆண்டு மாவட்டத்திற்கு, 4,000 வீடுகள், அரசு ஒதுக்கீடு செய்து. எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 4 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்து, வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டது.செங்கல்பட்டு அடுத்த, பாலுார் ஊராட்சியில், பயனாளிகள் வீடு கட்டும் பணியை, கலெக்டர் அருண்ராஜ், நேற்றுமுன்தினம், துவக்கி வைத்தார்.எட்டு ஊரட்சி ஒன்றியங்களில், 4,000 வீடு கட்டும் பணி ஒரே நாளில் துவக்கப்பட்டது. இப்பணிகளை, மூன்று மாதங்களில், முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், பாலுார் ஊராட்சியில், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு, கடந்த ஆண்டு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கு, வீடுகள் ஒதுக்கப்பட்டது. இங்கு, சாலைவசதி, குடிநீர், மற்றும் தெரு விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது என, ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.

பயனாளிகள் அதிர்ச்சி

மாநில அரசின் தொகுப்பு வீடு திட்டத்தில், 2024-- 25ல் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 3,990 பயனானிகளுக்கு வீடுகள் கட்ட, 139 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி, அரசு ஒதுக்கீடு செய்தது. இதில், 600 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற வீடுகள் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்தாண்டு 4,000 வீடுகள் கட்டும் பணி துவங்கி, மூன்று மாதங்களில் பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட 3,990 வீடுகளில் வெறும் 600 வீடுகள் தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது பயனாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஒன்றியம் வீடுகள் ஒதுக்கீடு ரூ.கோடிஅச்சிறுப்பாக்கம் 650 22.75.மதுராந்தகம் 809 28.31சித்தாமூர் 598 20.93லத்துார் 553 19.35.திருக்கழுக்குன்றம் 677 23.69திருப்போரூர் 430 15.05.காட்டாங்கொளத்துார் 259 9.06.புனிததோமையார்மலை 24 0. 84.மொத்தம் 4,000 140.00


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை