மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து 2 பசு மாடுகள் பலி
19-Oct-2025
திருப்போரூர்: கால்வாயில் விழுந்த இரண்டு பசு மாடுகள் மீட்கப்பட்டன. திருப்போரூர் அடுத்த சிறுசேரி சிப்காட் அருகே இரண்டு பசு மாடுகள், நேற்று காலை மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது இரண்டு மாடுகளும் தவறி, அங்குள்ள 3 அடி ஆழ மழைநீர் கால்வாயில் விழுந்தன. மேலே ஏற முடியாமல் தவித்தன. அருகில் இருந்தவர்கள் சிறுசேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மாடுகளின் கொம்பில் கயிறு கட்டி, மெதுவாக இழுத்து, இரண்டு மாடுகளையும் உயிருடன் மீட்டனர்.
19-Oct-2025