மேலும் செய்திகள்
திருவடிசூலம் குட்டையில் ஆண் சடலம் மீட்பு
22 hour(s) ago
செங்கல் பட்டு: அம்பத்துாரைச் சேர்ந்த ஜனார்த்தனன், 60, செங்கல்பட்டு அடுத்த திருவடிசூலம் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் மதியம் வெளியில் சென்றவர், கோவில் அங்கே உள்ள குட்டை தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு ஸ்ரீபெரும்புதுார்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே, சந்தவேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆப்பிள், 40. குறவர் இனத்தைச் சேர்ந்த இவர், நேற்று முன்தினம் இரவு, சூப்பர் எக்ஸ்.எல்., மொபட்டில், மனைவி சங்கீதா மற்றும் மகன் ஆதியுடன், சென்று கொண்டிருந்தார். சுங்குவார்சத்திரம் மேம்பாலம் அருகே, சர்வீஸ் சாலையில் இருந்து, வாலாஜாபாத் செல்ல திரும்பிய 'ஐச்சர்' லாரி, கட்டுப்பாட்டை இழந்து, மொபட் மீது மோதியதில், ஆப்பிள் இறந்தார். மனைவி, மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
22 hour(s) ago