உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சேதமடைந்த மின்மாற்றியால் கூணங்கரணையில் விபத்து அபாயம்

 சேதமடைந்த மின்மாற்றியால் கூணங்கரணையில் விபத்து அபாயம்

சித்தாமூர்: கூணங்கரணை கிராமத்தில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளதால் மாற்றி அமைக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தாமூர் அடுத்த பெரியகளக்காடி ஊராட்சிக்கு உட்பட்ட கூணங்கரணை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நுகும்பல் கிராமத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் இருந்து இப்பகுதிக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. கூணங்கரணை கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அருகே குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டு உள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள், சிமென்ட் கலவைகள் உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சேதமடைந்து உள்ளது. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் முறிந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. ஆகையால் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ