உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் பஸ் நிலையத்தில் விளம்பர பதாகைகளால் ஆபத்து

திருக்கழுக்குன்றம் பஸ் நிலையத்தில் விளம்பர பதாகைகளால் ஆபத்து

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சதுரங்கப்பட்டினம் - திருத்தணி சாலையை ஒட்டி, பேருந்து நிலையம் உள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம், மதுராந்தகம், திருப்போரூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், இங்கு பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.இதை ஒட்டியுள்ள பிரதான சாலையில், உள்ளூர், வெளியூர் வாகனங்கள் ஏராளமாக கடக்கின்றன. பவுர்ணமி நாளில், வேதகிரீஸ்வரர் கோவிலில் வழிபடும் பக்தர்கள், இச்சாலையில் கிரிவலம் செல்கின்றனர்.இச்சாலையில் செல்வோரை கவரும் வகையில், பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் சார்பில், பேருந்து நிலைய பக்கவாட்டில், சாலையை நோக்கிய திசையில், தனியாக கம்பி அமைத்து விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.நிரந்தரமாக அமைத்துள்ள அவற்றால், சாலையில் பயணிப்போர் கவனம் தவறினால், விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பேருந்து நிலையத்தில் உள்ள விளம்பர பதாகைகளை, வர்த்தகர்கள் தாமாகவே அமைத்தார்களா, பேரூராட்சி நிர்வாகம் அனுமதித்துள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.பேரூராட்சி நிர்வாகம், பதாகை கட்டணம் வசூலித்து அனுமதி அளித்திருந்தாலும், சாலையில் செல்வோர் கவனம் சிதறி, விபத்துகள் தான் ஏற்படும். பதாகைகளை பேருந்து நிலைய உட்புறத்திற்கு மாற்றவேண்டும். அத்துமீறிய விளம்பரம் எனில், உடனே அகற்றவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ