மேலும் செய்திகள்
நடைபாதை கடையை அகற்ற கோரி வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
21 hour(s) ago
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
21 hour(s) ago
பைக் மீது மோதிய கார் ஒருவர் படுகாயம்
21 hour(s) ago
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் தாலுகாவில், வட்டார வளர்ச்சி அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றின் தலைமையிடமாக உள்ளது.இப்பகுதியின் போக்குவரத்திற்கு, சதுரங்கப்பட்டினம் சாலை பிரதானமாக உள்ளது. பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், மார்க்கெட் உள்ளிட்டவற்றுக்கு, இவ்வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. வெளியூர் வாகனங்களும் வந்து செல்கின்றன.இத்தகைய சாலை, பேருந்து நிலைய பகுதி துவங்கி, சில கி.மீ., தொலைவிற்கு, ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் குறுகியுள்ளது.மேலும், பி.டி.வி.எஸ்., பள்ளி எதிரில், சாலையின் இருபுறமும் மண் அரித்து, அபாயகரமான சரிவுடன் உள்ளது. அதனால், பாதசாரிகள் விபத்து அபாயத்துடன் செல்கின்றனர்.குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் நெரிசலில் நடந்துசெல்லும் பள்ளி மாணவ - மாணவியர், சாலையோரம் நடக்க இடமின்றி, சரிவில் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே, இப்பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வெண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago