உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சைதை மருத்துவமனையில் டயாலிசிஸ் கூடுதல் இயந்திரங்கள் அமைக்க முடிவு

 சைதை மருத்துவமனையில் டயாலிசிஸ் கூடுதல் இயந்திரங்கள் அமைக்க முடிவு

சைதாப்பேட்டை: பல்வேறு பகுதிகளில் இருந்து, 'டயாலிசிஸ்' சிகிச்சை பெற, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மக்கள் அதிக அளவில் வருவதால், கூடுதலாக 10 இயந்திரங்கள் அமைக்க , மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, 1920ம் ஆண்டு துவங்கி, 30 படுக்கையுடன் செயல்பட்டது. இதே வளாகத்தில், 28.75 கோடி ரூபாயில், 110 படுக்கை வசதியுடன் கட்டிய புதிய கட்டடம், செப்., மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. ஏற்கனவே, 2022ம் ஆண்டு, 3 கோடி ரூபாயில், 14 டயாலிசிஸ் இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. இங்கு, 14 முதல் 82 வயதுள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் மூன்று 'சிப்ட்' முறையில் டயாலிசிஸ் செய்யப்படும். இதற்கான சிகிச்சை பெறுவோர் வருகை அதிகரித்ததால், கூடுதலாக 10 இயந்திரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது: நோயின் வீரியத்தை பொறுத்து, ஒரு நபருக்கு, மாதம் 8 முதல் 12 சுழற்சி முறையில் டயாலிசிஸ் செய்யப்படும். தனியாரில், ஒரு சுழற்சிக்கு, 3,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இங்கு இலவசமாக செய்து, மருந்தும் வழங்கப்படும். சைதாப்பேட்டைக்கு நேரடி ரயில், பேருந்து போக்குவரத்து உள்ள பூந்தமல்லி, ஆவடி, திருப்போரூர், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் அதிக அளவில் வருகின்றனர். முதல் ஆண்டில், 4,500 சுழற்சி முறையில் டயாலிசிஸ் செய்யப்பட்டது. இம்மாதம் வரை, 20,000 சுழற்சியை தாண்டியது. வேலைக்கு செல்வோரின் நலன் கருதி, அவர்கள் நேரத்திற்கு ஏற்ப டயாலிசிஸ் செய்கிறோ ம். புதிய கட்டடத்தில் வசதிகள் உள்ளதால், கூடுதலாக 10 இயந்திரங்கள் அமைக்கப்பட உள் ளன. ஒரு முறை டயாலிசிஸ் செய்ய, 4 மணி நேரம் வரை ஆகும். அப்போது, மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, 'டிவி' பார்க்கும் வசதி உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர், 79043 80412 மற்றும் 88389 10978 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை