பாபா கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருப்போரூர், ஜன. 3-திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில், சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு திருப்போரூர், கேளம்பாக்கம், படூர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து, பக்தர்கள் வருகின்றனர். வழக்கமாக வியாழக்கிழமைகளில், இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். நேற்று, புத்தாண்டின் முதல் வியாழக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு வழிபாட்டில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.