நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செங்கையில் 110 இடத்தில் துவக்கம்
செங்கல்பட்டுசம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வந்துள்ளதால், செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்காலிகமாக துவக்கப்பட்டுள்ளன. விவசாயிகளிடம் 1.65 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.மாவட்டத்தில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.மற்ற பகுதியில், குறைவாக சாகுபடி செய்யப்படுகிறது.சம்பா பருவத்தில், 67,685 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது.இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து, 1.65 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், 2024- - 25 பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கப்பட்டது.இதன்படி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,320 ரூபாய், தமிழக அரசின் ஊக்கத்தொகை 130 ரூபாய் என, மொத்தம் 2,450 ரூபாயும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,302 ரூபாய், தமிழக அரசின் ஊக்கத்தொகை 130 சேர்த்து, மொத்தம் 2,432 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும்போது, 17 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.நெல் கொள்முதல் நிலையங்களில், எவ்வித முறைகேட்டிற்கும் இடமளிக்காத வகையில் பணிபுரிய வேண்டும்.குறைபாடு கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன், சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க, முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, 110 இடங்களில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.விவசாயிகள் தாங்கள் நெல் பயிரிட்டுள்ள பரப்பளவிற்கு, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சீட்டா அடங்கல் பெற்று, கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில், தாங்கள் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்யலாம்.இந்நிலையில், மணப்பாக்கம் ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். சப்-கலெக்டர் நாராயணசர்மா, கூடுதல் கலெக்டர் அனாமிகா, வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆண்டு... நெல் கொள்முதல் நிலையம்.. விவசாயிகள்.. நெல் மெ.டன்.. கோடி ரூபாய்.
2021-22... 98.. 23509... 156000... 320.282022-23.. 117 24801 163000... 351.232023-24... 109... 21688 139700... 321.92சொர்ணவாரி பருவம்2024-25 49.. 4943 35741 87.88தேசிய கூட்டுறவு இணையம் 5... 1358 11800 27.28........