உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வரும் 16 ல் தேர்வு முகாம்

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வரும் 16 ல் தேர்வு முகாம்

திருப்போரூர்:தமிழ்நாடு பாரா கிரிக்கெட் அசோசியேஷன் 'பார் டிப்ரன்ட்லி ஏபல்ட்' சார்பில், ஆண்டுதோறும் தமிழ்நாடு மாநில அணிகளுக்காக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்தாண்டு வரும் 16ம் தேதி, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, மேலக்கோட்டையூர் பகுதி வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில் நடைபெறுகிறது.காலை 8:00 மணி முதல் நடைபெறும் இந்த முகாமில், கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கலாம். முகாமில் வீரர்களின் விளையாட்டு திறன், உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்து பரிசோதித்து தேர்வு செய்யப்படுவர். முகாமிற்கு வரும் வீரர்கள் யு.டி.ஐ.டி., மாற்றுத்திறனாளி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.மேலும், விவரங்களுக்கு 9940633177, 9841702338 சென்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !