உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அணுகு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

அணுகு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

மதுராந்தகம்,:மதுராந்தகம் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டிய அணுகு சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும், வாகனங்களால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட கிராம சாலைகள், மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில், விபத்தில் சிக்கும் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள அணுகு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், காலை மற்றும் மாலை வேலைகளில், தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு பேருந்துகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகள், இப்பகுதியை கடந்து செல்ல மிகவும் அவதி அடைகின்றனர். சாலையின் இருபுறமும், விபத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, அணுகு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள, விபத்தில் சிக்கிய வாகனங்களை, அப்புறப்படுத்த வாகன ஓட்டியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !