உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாவட்ட அளவிலான செஸ் போட்டி

மாவட்ட அளவிலான செஸ் போட்டி

செய்யூர்: செய்யூரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நேற்று நடந்தது. செய்யூரில் உள்ள செயின்ட் எக்ஸ்யூபெரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இசைநிலா செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் யு–9, யு–12, யு–17 வயது என மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. 20 பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ – மாணவியருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை