உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்தலசயனர் கோவிலுக்கு சுவாமி வாகனம் நன்கொடை

ஸ்தலசயனர் கோவிலுக்கு சுவாமி வாகனம் நன்கொடை

மாமல்லபுரம் : ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், நிலம், வீட்டுமனை தோஷ பரிகார சிறப்பும் பெற்றது.இக்கோவிலில், பங்குனி உத்திர 10 நாட்கள் உற்சவத்தில், நிலமங்கை தாயார், தினமும் இரவு கோவிலுக்குள் உள்புறப்பாடாக உலா செல்வார்.தாயார் உலாவிற்காக, முன்புறம் சூரியபிரபை, பின்புறம் சந்திரபிரபை என அமைந்த வாகனத்தை, பெருங்களத்துாரைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவர், நேற்று நன்கொடையாக அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்