உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் பூயிலுப்பை கிராமத்தில் தொற்று பீதி

கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் பூயிலுப்பை கிராமத்தில் தொற்று பீதி

திருப்போரூர், பூயிலுப்பை கிராமத்தில், கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் உள்ளதால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருப்போரூர் வட்டம், பூயிலுப்பை கிராமம், அம்பேத்கர் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதி மக்களுக்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குழாய் வாயிலாக தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் செல்கிறது.இதனால், குடிநீர் குழாயில் லேசான விரிசல் அல்லது உடைப்பு ஏற்பட்டால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. அவ்வாறு குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்தால், அதை குடிக்கும் அப்பகுதிவாசிகளுக்கு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த பெருவாரியான மக்கள், அதிக விலைக்கு கடைகளில் குடிநீர் 'கேன்' வாங்கி குடிக்கும் அவலநிலை உள்ளது. வசதி இல்லாதவர்கள், அதே குடிநீரை குடித்து வருகின்றனர்.எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், இப்பகுதிவாசிகளின் நலனை கருத்தில் கொண்டு, கழிவுநீரில் செல்லும் குடிநீர் குழாய் இணைப்பை மாற்றி அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பூயிலுப்பை கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை