உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விபத்தில் 2 லாரிக்கு இடையில் சிக்கிய டிரைவர் உயிரிழப்பு

விபத்தில் 2 லாரிக்கு இடையில் சிக்கிய டிரைவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 38. கன்டெய்னர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.கடந்த 30ம் தேதி அதிகாலை, மகேந்திரா சிட்டியில் உள்ள பி.எம்.டபிள்யூ., கார் தயாரிக்கும் தொழிற் சாலைக்கு லோடு ஏற்றி வந்தார்.தொழிற்சாலையின் உள்ளே கன்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு, இன்ஜினை நிறுத்தாமல் லாரியின் முன்னே சென்று பாலமுருகன் நின்றுள்ளார்.அப்போது கன்டெய்னர் லாரி நகர்ந்து, பாலமுருகன் மீது மோதி, முன்னே நின்றிருந்த மற்றொரு கன்டெய்னர் லாரி மீது மோதி நின்றது.இதில், இரண்டு கன்டெய்னர் லாரிகளுக்கு இடையே சிக்கி படுகாயமடைந்த பாலமுருகனை, அங்கிருந்தோர் மீட்டு பொத்தேரி, எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி, பாலமுருகன் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை