உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அமந்தங்கரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

அமந்தங்கரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

சித்தாமூர்:சித்தாமூர் அருகே அமந்தங்கரணை கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் திரவுபதி அம்மனுக்கு பாரத திருவிழா விமரிசையாக நடத்தப்படும்.இந்த ஆண்டிற்கான பாரத திருவிழா, கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் மாலை மகாபாரத சொற்பொழிவு நடந்து, தெருக்கூத்து நாடகமும் நடத்தப்பட்டு வந்தது.நேற்று மதியம், 1:30 மணியளவில், பாரத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.இதில், உற்சவத்திற்காக கோவில் அருகே, களிமண்ணால் பிரமாண்டமாக, 25 அடி நீள துரியோதனன் சிலை செய்து வைத்து, பீமன் - - துரியோதனன் போரிடுவது நாடகமாக நடந்தது. இறுதியில், திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.இதில், அமந்தங்கரணை மற்றும் சுற்று வட்டார கிராமத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை