உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடைப்பந்து மைதானத்திற்கு பூமி பூஜை

கூடைப்பந்து மைதானத்திற்கு பூமி பூஜை

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.மாணவர்களுக்கு, கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்க, விளையாட்டு உபகரணங்களுடன் மைதானம் அமைக்க வேண்டுமென, பள்ளி நிர்வாகத்தினர் நகராட்சி தலைவருக்கு மனு அளித்தனர். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் கூடைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க, செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.,வின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விளையாட்டு மைதானத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., - வரலட்சுமி, நகராட்சி தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நான்கு மாதங்களில் பணிகள் நிறைவடைந்து, மாணவர்கள் பயன்பாட்டிற்கு மைதானம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை