பைக்கில் சென்ற முதியவர் தடுமாறி விழுந்து உயிரிழப்பு
பவுஞ்சூர்: தட்டாம்பட்டில், 'பைக்'கில் சென்ற முதியவர், தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். பவுஞ்சூர் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 63. இவர், நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில், தன் 'ஸ்பிளென்டர்' பைக்கில், கூவத்துாரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக கிளம்பினார். தட்டாம்பட்டு கிராமத்திலுள்ள இரும்பு ஓடு தயாரிக்கும் கம்பெனி அருகே சென்ற போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சாலையில் சென்றவர்கள் அவரை மீட்டு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.