உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புடவையில் தீப்பற்றி மூதாட்டி பலி

புடவையில் தீப்பற்றி மூதாட்டி பலி

மறைமலை நகர்:மறைமலை நகர் அருகே, வெந்நீர் வைத்த போது புடவையில் தீப்பற்றி, மூதாட்டி உயிரிழந்தார். மறைமலை நகர் அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தம்மாள், 85. இவர் நேற்று காலை, தன் வீட்டின் மூன்றாவது மாடியில் விறகு அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக முத்தம்மாள் புடவையில் தீப்பற்றியுள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து முத்தம்மாளை மீட்டனர்.ஆனாலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின்படி வந்த மறைமலை நகர் போலீசார், முத்தம்மாள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை