மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
5 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
9 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
9 hour(s) ago
திருப்போரூர்:லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பதில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தீவிரமாக செயல்பட துவங்கி உள்ளனர்.அனைத்து மாவட்டங்களிலும், தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் பறக்கும் படை, நிலைக்குழு, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.நேற்று, திருப்போரூர் சட்டசபை தொகுதியில் அடங்கிய திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலை, வெங்கூர் உள்ளிட்ட பகுதிகளில், பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். 50,000 ரூபாய்க்கு மேல் பணம், அதிக எண்ணிக்கையில் பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என, சோதனை செய்யப்பட்டது.தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததைதொடர்ந்து, திருப்போரூர் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.அங்கிருந்த கட்சி விளம்பரம், கொடிக் கம்பம்அகற்றப்பட்டன. மேலும், எம்.எல்.ஏ., அலுவலகம், ஓ.எம்.ஆர்., சாலை, அம்பேத்கர் சிலை அருகே செயல்படுவதாக, தகவல் பலகை வைத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
5 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago