உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு, முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், வரும் 4ம் தேதி நடக்கிறது.மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தென்பிராந்திய மறுவாழ்வு இயக்கம் மூலம், முன்னாள் படைவீரர்களுக்கான பிரத்யேக வேலை வாய்ப்பு முகாம், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் விமானப்படை தளத்தில், வரும் 4ம் தேதி நடக்கிறது.முன்னாள் படை வீரர் அடையாள அட்டை, சுய விபர குறிப்பு ஐந்து பிரதிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் www.esmhire.comஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 020-2634 1217 - 011- 2086 2542 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது desw.gov.inமற்றும் desw.gov.inஎன்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை