உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  செய்யூரில் வரும் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

 செய்யூரில் வரும் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு: செய்யூரில் தனியார் சார்பில், வேலைவாய்ப்பு முகாம், வரும் 22ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வரும் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 5,000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. அனுமதி இலவசம். மேலும், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். முகாமில், எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ., - ஐ.டிஐ., டிப்ளமோ, பாராமெடிக்கல் போன்ற கல்வித்தகுதி உடைய படித்த வேலைவாய்ப்பற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை. தகுதியுடையோர் தங்களுடைய கல்வி சான்றிதழ் நகல்கள், சுயவிபர குறிப்பு மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 044- 2742 6020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ