உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போலீசில் சிக்கிய போதை வாலிபர் மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்

போலீசில் சிக்கிய போதை வாலிபர் மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசு, 31. கடந்த 4ம் தேதி தன் மனைவியுடன் செங்கல்பட்டுக்கு, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' பைக்கில் சென்றார். செங்கல்பட்டு ராட்டினங்கிணறு அருகில், மாருதி கார் ஒன்று இவரது பைக்கில் மோதியது.உடனே கவியரசு, தன் உறவினரான சாஸ்திரம் பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத்,30, என்பவருக்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு அழைத்தார்.அங்கு வந்த கோபிநாத், காரில் இருந்த டிரைவரை கீழே இறங்கி வருமாறு கூறிய போது, மது போதையில் இருந்த அந்த நபர், காரை கோபிநாத் மீது மோதி கீழே தள்ளி, மீண்டும் காரை பின்னால் எடுத்து கோபிநாத் கால்கள் மீது ஏற்றினார்.இதில் அவரின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.அந்த வழியாக வந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் அஜித், காரை மடக்க முயன்ற போது, கார் மின்னல் வேகத்தில் பறந்தது. சக போலீசாருக்கு தகவல் தெரிவித்த உதவி ஆய்வாளர் அஜித், காரை பின்தொடர்ந்து சென்று, பொதுமக்கள் உதவியுடன் அம்மணம்பாக்கத்தில் மடக்கிப் பிடித்தார்.அப்போது பொது மக்கள் தாக்கியதில், காரை போதையில் ஓட்டி வந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த விஷ்வா,27, என்பவருக்கு, தலையில் காயம் ஏற்பட்டது.கோபிநாத் மற்றும் விஷ்வா இருவரையும் மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மேலும் விஷ்வா மீது கொலை முயற்சி, மது போதையில் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு நகர போலீசார் மருத்துவமனையில் காவலுக்கு இருந்தனர்.இந்நிலையில், விஷ்வா நேற்று முன்தினம் நள்ளிரவு, மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ