உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோடை வெயிலில் வாடும் பூச்செடிகள் தண்ணீர் விட்டு பராமரிக்க எதிர்பார்ப்பு

கோடை வெயிலில் வாடும் பூச்செடிகள் தண்ணீர் விட்டு பராமரிக்க எதிர்பார்ப்பு

சிங்கப்பெருமாள் கோவில்:சிங்கப்பெருமாள் கோவில் -- ஒரகடம் செல்லும் சாலையின் மையத்தடுப்பில் உள்ள பூச்செடிகள், கோடை வெப்பம் காரணமாக வாடிய நிலையில் உள்ளன.சிங்கப்பெருமாள் கோவில் -- ஸ்ரீ பெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை, 25 கி. மீ., துாரம் உடையது. இந்த சாலையின் மையத் தடுப்பில், திருக்கச்சூர் -- ஒரகடம் வரை அளரி உள்ளிட்ட பூச்செடிகள், 5 கி.மீ., துாரம் வரை நடப்பட்டு உள்ளன.இவற்றை ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கார் தொழிற்சாலை நிறுவனம், ஆட்கள் வைத்து பராமரித்து வருகிறது.இதனால், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சாலை ஓரங்களில் பூக்கள் பூத்து வண்ணமயமாக இருந்தது.கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தற்போது செடிகள் வாடி வதங்கி, காய்ந்த நிலையில் உள்ளன.இதன் காரணமாக எதிர் திசையில் இரவு நேரங்களில் வரும் வாகனங்களின் வெளிச்சம், சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.எனவே, மீண்டும் தண்ணீர் விட்டு, இந்த செடிகளை முறையாக பராமரிக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை