மேலும் செய்திகள்
இ.சி.ஆர்., சாலையில் மண் குவியல்
13-Oct-2024
மாமல்லபுரம்:சென்னை - புதுச்சேரி இடையே, கிழக்கு கடற்கரை சாலையாக இருந்த சாலை, கடந்த 2002 முதல், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ், சுங்க கட்டண சாலையாக நிர்வகித்து பராமரிக்கப்பட்டது. இத்தடத்தில் கடந்து சென்ற வாகன வகை, கடக்கும் தொலைவு ஆகியவற்றுக்கேற்ப, சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.துவக்கத்தில், முழுநீள சாலையும் இருவழிப் பாதையாக இருந்தது. நாளடைவில், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை காண, சுற்றுலா பயணியர், தனி வாகனங்களில் அதிகளவில் படையெடுத்தனர்.சுற்றுலா வாகன போக்குவரத்து பெருகிய நிலையில், சென்னை - மாமல்லபுரம் இடையே நெரிசல் ஏற்பட்டது. தொலைதுார வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், சென்னை அக்கரை - மாமல்லபுரம் அரசு மருத்துவமனை பகுதி இடையே, 32 கி.மீ., தொலைவிற்கு, மையத் தடுப்புடன் நான்குவழிப் பாதையாக, கடந்த 2018ல் மேம்படுத்தியது.மாமல்லபுரம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி மற்றும் பெட்ரோல் பங்க், தனியார் கடற்கரை விடுதிகள், அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி, தனியார் சிற்பக்கூடங்கள் இயங்குகின்றன.இப்பகுதியில் உள்ளூர் போக்குவரத்து பெருகிய நிலையில், இவ்வாகன போக்குவரத்தால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும்.இதை தவிர்க்க கருதி, சாலை நிறுவனம், பிரதான சாலையின் இருபுறமும், சர்வீஸ் சாலையும் அமைக்க முடிவெடுத்தது. கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்தின்போதே, அதையும் செயல்படுத்தியது.பிரதான சாலையின் கிழக்கு பகுதியில், புறவழிப்பாதை சந்திப்பிலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதி வரை, சர்வீஸ் சாலை அமைத்தது.பிரதான சாலையின் மேற்கு பகுதியில், சர்வீஸ் சாலை அமைக்க முயன்றபோது, தனியார் சிலரின் முட்டுக்கட்டையால், ஆங்காங்கே துண்டு துண்டாக மட்டும் சாலை அமைக்கப்பட்டு, முழுமையாக அமைக்கப்படாமல் முடங்கியது. சாலை நிறுவனமும், அதை அரைகுறை பணியுடன் கைவிட்டது.அதனால், இருசக்கர வாகன பயணியர், பிரதான சாலையைக் கடக்கும்போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டது. குறிப்பாக, இங்குள்ள டாஸ்மாக் கடைக்கு குடிமகன்கள் படையெடுப்பதால், போதை ஆசாமிகளால் தொடர் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், முடங்கிய சர்வீஸ் சாலைக்கு, தற்போது விமோசனம் கிடைத்துள்ளது.முந்தைய கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரம் - புதுச்சேரி பகுதி, கடந்த 2018ல் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, நான்குவழிப் பாதையாக மேம்படுத்தப்படுகிறது.மாமல்லபுரம் புறவழி சந்திப்பில், தொலைதுார வாகனங்கள் இடையூறின்றி எளிதாக கடக்க, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திலிருந்து வெளியேறும் சென்னை தட வாகனங்கள், உள்ளூர் வாகனங்கள், மேம்பாலத்தின் கீழ் குறுக்கில் கடந்து, கிழக்கு கடற்கரை சாலையை அடையும் வகையில், புதிய அகலமான சர்வீஸ் சாலை அமைக்கப்படுகிறது.அதேபோல், சென்னை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், மாமல்லபுரத்திற்குள் நுழைய அமைக்கப்பட்ட முந்தைய சர்வீஸ் சாலையும் மேம்படுத்தப்படுகிறது. இந்த சர்வீஸ் சாலைகளால், இப்பகுதி போக்குவரத்து எளிதாகும். விபத்தும் தவிர்க்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
13-Oct-2024