விவசாயிகள் சங்க மாவட்ட குழு கூட்டம்
திருப்போரூர்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயம் மற்றும் விவசாயிகள் பிரச்னைகளை விவாதிக்கும் மாவட்ட குழு கூட்டம், திருப்போரூரில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று நடந்தது. மாநில செயலர் துளசிநாராயணன் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்கள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.செய்யூர், தொண்டமநல்லுார் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்க போராட்டம் நடத்த வேண்டும்.செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளையும் பாதுகாத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயம் மற்றும் குடிநீருக்கான மராமத்து பணிகளை அனைத்து பகுதிகளிலும் செய்ய, அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.