விவசாயிகள் குறைதீர் கூட்டம் 16 மனு ஏற்பு
மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று, விவசாயிகள் குறைதீர் கூட்டம், வட்டாட்சியர் பாலாஜி தலைமையில் நடந்தது.வருவாய் கோட்டாட்சியர் ரம்யா முன்னிலை வகித்தார்.இதில், மதுராந்தகம் ஏரி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; மதுராந்தகம், செய்யூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஏரிகளில் பழுதாகி உள்ள பாசன மதகு மற்றும் பாசன கால்வாய்களை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 16 மனுக்கள் வரப்பெற்றன.பொதுப்பணித் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மின்வாரியத் துறை, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் என, பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.