உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், 21 மத்திய அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில், மதுராந்தகம் வட்டாரம், பிலாப்பூரில் செயல்படும், மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.இதற்கான பணம், கடந்த 45 நாட்களுக்கும் மேலாக, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால், கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள், கடன் சுமையால் தவித்து வருகின்றனர். இதனால்,பிலாப்பூர் ஊராட்சியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று, 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த கொள்முதல் நிலையத்தில், 15,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், விவசாயிகளிடமிருந்து இன்னும் கொள்முதல் செய்யப்படாமல், களத்திலேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளன.தற்போது பெய்து வரும் கோடை மழையில், நெல் நனைந்து முளைத்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !