உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இடியும் நிலையில் வி.ஏ.ஓ., கட்டடம் பெரியவிப்பேடு கிராமத்தில் அச்சம்

இடியும் நிலையில் வி.ஏ.ஓ., கட்டடம் பெரியவிப்பேடு கிராமத்தில் அச்சம்

திருப்போரூர்:பெரியவிப்பேடு கிராமத்தில், இடிந்து விழும் நிலையிலுள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த பெரியவிப்பேடு ஊராட்சியில், வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பெரியவிப்பேடு, சின்ன விப்பேடு, கட்டக்கழனி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு சான்றிதழ்கள் வாங்க வருகின்றனர். இந்த அலுவலகத்தின் கான்கிரீட் கூரை, முன்வாயில் கூரை, பக்கவாட்டு சுவர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விரிசல் ஏற்பட்டு, கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், இங்கு பணியாற்றும் வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர் மட்டுமின்றி, அப்பகுதி மக்களும் அச்சத்தில் உள்ளனர். மழைக்காலத்தில், அலுவலகத்திற்குள் தண்ணீர் கசிந்து, ஆவணங்கள் நாசமாகின்றன. இந்த அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றவும், புதிய கட்டடம் கட்டவும், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து, பெரியவிப்பேடு வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி