உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் அச்சம்

 நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் அச்சம்

மதுராந்தகம்:சிலாவட்டம் ஊராட்சியில், விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மதுராந்தகம் ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சியில், 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள விவசாய நிலங்களில் ஆங்காங்கே மின் கம்பங்கள் நடப்பட்டு, விவசாய மோட்டார்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவசாய நிலங்களில் செல்லும் மின் கம்பிகள், மிகவும் தாழ்வாக உள்ளன. இதனால் டிராக்டர் வாகனங்களைக் கொண்டு உழவுப் பணி மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. மேலும், அறுவடை இயந்திரங்களை வயலில் இறக்கி, நெல் அறுவடை செய்ய முடியாத நிலை தொடர்கிறது. வயல்வெளிகளில் கால்நடைகளை மேய்ப்பவர்களும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால், மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, ஆபத்தான வகையில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு மென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை