உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் கம்பம் உடைந்து விழுந்ததில் உணவு வெலிவரி ஊழியர் காயம்

மின் கம்பம் உடைந்து விழுந்ததில் உணவு வெலிவரி ஊழியர் காயம்

தாம்பரம்:வேலுார் மாவட்டம், நாதவனுார் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா, 23. இவருக்கு திருமணமாகி, பவித்ரா என்ற மனைவியும், ஏழு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.மேற்கு தாம்பரம், புலிகொரடு, கன்னடப்பாளையத்தில் நண்பர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவருடன் சூர்யா தங்கி, பிரபல உணவு வினியோக நிறுவனமான, 'ஷொமேட்டோ'வில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு வினியோகம் செய்வதற்காக, மேற்கு தாம்பரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். மேற்கு தாம்பரம், போக்குவத்து காவல் உதவி மையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையை கடக்க காத்திருந்தார்.அப்போது, திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்தில், தாம்பரம் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு மின் கம்பம், கண்ணிமைக்கும் நேரத்தில் அடியோடு உடைந்து, சூர்யா தலையில் விழுந்தது.இதில், படுகாயமடைந்த சூர்யாவை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு, ஆபத்தான நிலையில், சூர்யா சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சுட்டிக்காட்டியும் திருந்தாததாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மேம்பாலத்தில் உள்ள மின் கம்பங்களில், ஏகப்பட்ட தனியார் கேபிள்கள் கட்டப்பட்டுள்ளன. கேபிள்களை இழுத்து கட்டுவதால், பல மின் கம்பங்கள் வலுவிழந்து, சாய்ந்த நிலையில் உள்ளன. அது போன்ற மின் கம்பங்கள், அதிக காற்று அடிக்கும் போது உடைந்து விழ வாய்ப்பு உள்ளது.இது குறித்து நம் நாளிதழில் கடந்த 13ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளாததாலே, மின் கம்பம் அடியோடு உடைந்து, உணவு டெலிவரிக்கு சென்று கொண்டிருந்த சூர்யா மீது விழுந்துள்ளது. இது போன்று விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, தனியார் கேபிள்களை அகற்றி, மின் கம்பங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ