உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொண்டமங்கலம் ஏரியில் மண் எடுப்பு தடுத்து நிறுத்திய வனத்துறையினர்

கொண்டமங்கலம் ஏரியில் மண் எடுப்பு தடுத்து நிறுத்திய வனத்துறையினர்

மறைமலைநகர்:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டங்கலம் கிராமத்தில், 85 ஏக்கர் பரப்பளவில் கொண்டமங்கலம் ஏரி உள்ளது.பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் தண்ணீரைப் பயன்படுத்தி, இப்பகுதியைச் சுற்றியுள்ள 150 ஏக்கர் பரப்பளவில், விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்த ஏரியில் மண் எடுக்க, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் மண் எடுக்கப்பட்டு வந்தது.நேற்று காலை, வழக்கம் போல மண் எடுக்கப்பட்ட போது, கொண்டமங்கலம் கிராம மக்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சேர்ந்து, ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்தினர்.மண் எடுக்க லாரிகள் செல்ல தனியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதி வனப்பகுதியில் உள்ளதால், இப்பாதையில் லாரிகள் செல்ல, வனத்துறையினரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.இதையடுத்து, ஒரு லாரி மீது மட்டும் வழக்குப்பதிவு செய்தனர்.இதுகுறித்து, கொண்டமங்கலம் கிராமத்தினர் கூறியதாவது:இந்த ஏரியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இதே போன்று மண் அள்ளப்பட்டது. இதனால் ஏற்பட்ட பெரிய பள்ளங்களில், அடிக்கடி கால்நடைகள் சிக்கி உயிரிழந்து உள்ளன. தற்போதும், அரசு அனுமதி அளித்த அளவை விட ஆழமாக பள்ளம் தோண்டிமண் அள்ளப்பட்டு வருகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து, முறைகேடாக மண் அள்ளப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதையடுத்து, தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம மக்களை சமாதானம் செய்து, வனப்பகுதி இல்லாத மாற்றுப் பாதையில் லாரிகள் செல்ல, தனி பாதை ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ