முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நான்கு பேருக்கு பதவி உயர்வு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நான்கு பேருக்கு, துணை தாசில்தாராக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், சப் - கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில், முதல் நிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பதவி உயர்வு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, 20 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு, தற்காலிகமாக துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கடந்தாண்டு டிச., 3ம் தேதி, கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும், முதுநிலை வருவாய் ஆய்வாளகள் நான்கு பேருக்கு, தற்காலிகமாக துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கியும், துணை தாசில்தார்கள் நான்கு பேரை பணியிட மாற்றம் செய்தும், கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
பதவி உயர்வு பணியிடமாற்றம்
பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம்வெங்கடேசன் முதுநிலை வருவாய் ஆய்வாளர், திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம் உதவி மேலாளர் டாஸ்மாக், திருமழிசை.குப்புசாமி முதுநிலை வருவாய் ஆய்வாளர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், செங்கல்பட்டு தலைமை உதவியாளர், நிலம் கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டுகீதா முதுநிலை வருவாய் ஆய்வாளர், தாலுகா அலுவலகம், செங்கல்பட்டு தலைமை உதவியாளர், தனி துணை ஆட்சியர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் செங்கபட்டு.அன்புக்கரசி முதுநிலை வருவாய் ஆய்வாளர், கலெக்டர் அலுவலகம் செங்கல்பட்டு தலைமை உதவியாளர் சட்டப்பிரிவு, கலெக்டர் அலுவலகம் செங்கபட்டு.சத்யா ... தலைமை உதவியாளர், தனித்துணை ஆட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு ... தலைமையிடத்து துணை தாசில்தார், செங்கல்பட்டு.சுகுமார் ... மண்டல துணை தாசில்தார், காட்டாங்கொளத்துார் ... மண்டல துணை தாசில்தார் வண்டலுார்பரிமளா ... வட்ட வழங்கல் அலுவலர், திருப்போரூர் .... மண்டல துணை தாசில்தார் காட்டாங்கொளத்துார்.பெரியமாரியம்மாள் ... தலைமை உதவியாளர், கலெக்டர் அலுவலகம் செங்கல்பட்டு... மண்டல துணை தாசில்தார் கருங்குழி....