உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சிற்பங்களை பார்வையிட இன்று இலவச அனுமதி

 சிற்பங்களை பார்வையிட இன்று இலவச அனுமதி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிட சுற்றுலா பயணியரை இன்று ஒரு நாள் இலவசமாக அனுமதிப்பதாக, தொல்லியல் துறை அறிவித்துள்ளது. பண்டைய கால பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ளன. அவற்றை பாதுகாத்து பராமரித்து, வருங்கால தலைமுறையினர் அறிய தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது. அதற்காக, ஏப்., 18ம் தேதி, உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியாவில் நவ., 19ம் தேதி முதல், 25ம் தேதி வரை, உலக பாரம்பரிய வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ள மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில், தொல்லியல் துறையினர், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இவ்வார துவக்க நாளான இன்று மட்டும், மாமல்லபுரம் சிற்பங்களில் சுற்றுலா பயணியரை கட்டணமின்றி அனுமதிப்பதாக, தொல்லியல்துறை மாமல்லபுரம் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர் தெரிவித்தார். மற்ற நாட்களில் நுழைவுக் கட்டணமாக, இந்தியருக்கு தலா 40 ரூபாய், வெளிநாட்டுப் பயணியருக்கு தலா 600 ரூபாய் என, தொல்லியல் துறை வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ