உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிற்பங்களை காண இலவச அனுமதி மாமல்லையில் பயணியர் குதுாகலம்

சிற்பங்களை காண இலவச அனுமதி மாமல்லையில் பயணியர் குதுாகலம்

மாமல்லபுரம்:உலக பாரம்பரிய வார துவக்க நாளான நேற்று, சர்வதேச பயணியர் உள்ளிட்ட பயணியர் இலவசமாக சிற்பங்களை காண அனுமதியளிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா களைகட்டியது.பாரம்பரிய நினைவுச்சின்னங்களை, தொல்லியல் துறை பாதுகாத்து பராமரிக்கிறது. பழங்கால சின்னங்களின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாப்பது குறித்தும், வருங்கால தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்தியாவில் உலக பாரம்பரிய வாரம், நவ., 19 - 25ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.இவ்வார துவக்க நாளான நேற்று, மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை, சுற்றுலா பயணியர் நுழைவுக் கட்டணம் இன்றி இலவசமாக பார்வையிட, தொல்லியல் துறை அனுமதித்தது.இந்திய பயணியருக்கு, தலா 40 ரூபாய், சர்வதேச பயணியருக்கு 600 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், பயணியர் நேற்று கட்டணமின்றி பார்வையிட்டனர்.தற்போது சர்வதேச பயணியர் வருகை அதிகரித்து சுற்றுலா களைகட்டும் சூழலில், அவர்களிடம் இலவச அனுமதி குறித்து வழிகாட்டிகள் தெரிவித்ததால், அவர்கள் அனைவரும் குதுாகலமாக சிற்பங்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை