மேலும் செய்திகள்
குழந்தைகள் தின விழா
15-Nov-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, இலவச மருத்துவ முகாம், துவங்கியது.செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து, 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்த, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.இதன்படி, காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியங்களில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமை, செங்கல்பட்டு தனியார் பள்ளியில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் நேற்று துவக்கி வைத்தார். இம்முகாமில், 70 குழந்தைகள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.இதைத்தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில், வரும் 27ம் தேதியும், கொலம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில், வரும் ஜன., 7ம் தேதியும், பவுஞ்சூரில் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 10ம் தேதியும் முகாம் நடக்கிறது.மதுராந்தகம் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில், 21ம் தேதி, திருக்கழுக்குன்றம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 28ம் தேதி, திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாம்பரம் சேலையூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், 31ம் தேதி மருத்துவ முகாம் நடக்கிறது.முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையும், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டையும் பதிவு செய்யப்படும்.உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவற்றுக்கு தகுதியான பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.
15-Nov-2024