உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இருளர்களுக்கு இலவச தார்ப்பாய்

இருளர்களுக்கு இலவச தார்ப்பாய்

மாமல்லபுரம்,: மாமல்லபுரம் கடற்கரை பகுதியில், இருளர்கள் குடிசை அமைத்து வசிக்கின்றனர். அவர்களுக்கு வீடுகள் கட்ட, திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை பகுதியில், அரசு இடம் ஒதுக்கியுள்ளது. அப்பகுதியில் இருளர்களுக்கு வீட்டுமனை அளிக்கக் கூடாதென, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பதால், அங்கு குடியேற இயலாமல், மாமல்லபுரத்தில் குடிசைகளில் இவர்கள் வசிக்கின்றனர்.கனமழை காரணமாக, கடந்த இரு நாட்களாக, இவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். பலத்த காற்றில் குடிசைகள் சேதமடைந்தது குறித்து அறிந்த திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, தலா ஒரு இலவச தார்ப்பாய் வீதம், 85 பேருக்கு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை