| ADDED : நவ 28, 2025 04:11 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பராமரிப்பு பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில், அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கட்டடங்களுக்கு வண்ணம் பூசி, கட்டடங்களை பராமரிப்பு செய்து தருமாறு, நகராட்சி நிர்வாகத்திடம், பள்ளி நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்து, பராமரிப்பு பணிகள் மற்றும் வண்ணம் அடிக்க, நகராட்சி பொது நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை செயல்படுத்த, நகராட்சி ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன் பின், பராமரிப்பு பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் துவக்கப்படும் என, நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.